ஹெல்த் டிப்ஸ்: வெயிலால் சிவக்கும் கண்கள்… தடுப்பது எப்படி?

கோடையில் கண்களுக்கு வெளியே இருக்கும் இமை தொடங்கி விழித்திரை, கண் நரம்புகள் என எதில் பிரச்சினை ஏற்பட்டாலும் கண்கள் சிவக்கலாம். இது மட்டுமல்லாமல் தூசி, வளர்ப்பு பிராணிகள், பூக்கள் ஆகியவை ஏற்படுத்தும் அலர்ஜியாலும் கண்கள் சிவக்கலாம்.

மேலும் அரிப்பு, கண் வறட்சி ஆகியவையும் கண்கள் சிவப்பாவதற்கு முக்கிய காரணங்கள். இமைகளில் கட்டி, கருவிழியில் சிராய்ப்பு, கண்களில் தொற்று, மெட்ராஸ் ஐ போன்றவையும் கண்களை சிவக்கச் செய்யலாம்.

“கண்கள் சிவப்பாவது மட்டுமல்லாமல்… கண் வலி, அரிப்பு, தொடர்ந்து கண்ணீர் வடிதல், கண் வீக்கம், அழுக்கு போல் கண்ணீரில் இருந்து வெளியேறுதல் ஆகியவையும் கண்கள் சிவக்க காரணமாகின்றன.

இதைத் தடுக்க… கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றை முடிந்தளவுக்குத் தவிர்க்க வேண்டும். அது முடியாதப்பட்சத்தில் லூப்ரிகன்ட் ஐ டிராப்ஸை (Lubricant Eye Drops) பயன்படுத்தலாம்.

எதனால் கண்களில் அலர்ஜி ஏற்படுகிறதோ, அதை முற்றிலும் தவிர்க்கலாம். கண்களில் அரிப்பு ஏற்பட்டால் கைகளை வைத்துத் தேய்க்காமல் தண்ணீரால் கண்களைக் கழுவ வேண்டும்.

அடிக்கடி கண்களை கைகளால் தொடக்கூடாது. டூவீலர் போன்றவற்றில் பயணிக்கும்போது முன்னெச்சரிக்கையாக கண்ணாடி அல்லது வைஸர் உள்ள ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது.

எப்போதும் கண்களுக்கு தாமாக சிகிச்சையோ, மருந்துகளோ எடுத்துக்கொள்ளக் கூடாது. கண்டிப்பாக மருத்துவரிடம்தான் காட்ட வேண்டும்.

மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிப்போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிளக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயில் ஒரு வகைக்கு, கண்கள் சிவப்பதும் ஓர் அறிகுறி. அதனால் அஜாக்கிரதை வேண்டாம்.

உடனே மருத்துவரிடன் செல்ல முடியாதபட்சத்தில் சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவலாம் அல்லது லூப்ரிகன்ட் ஐ டிராப்ஸ் பயன்படுத்தலாம்.

ஆனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக டாக்டரிடம் காட்டுவது மிக மிக அவசியம்” என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சம்மர் டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு ஐந்து ஈஸி டிப்ஸ்!

அப்டேட் குமாரு

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ரெய்டு!

மோடி ரோடுஷோவில் மாணவர்கள் : போலீஸ் பதிலளிக்க உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts