சூரியனுக்கு மிக அருகில்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ரியல் எஸ்டேட் விளம்பரத்துல சென்னைக்கு மிக அருகில், செங்கல்பட்டுக்கு மிக அருகில்னு சொல்லுவாங்கள்ல… அதுபோல இப்ப நம்மூரு சூரியனுக்கு மிக அருகில் இருக்குனு நினைக்கிறேன். இன்னிக்கு ஒரு வேட்பாளருக்கு போன் போட்டு, ‘பிரச்சாரம் எப்படி போகுது?’னு கேட்டேன். நல்ல வேளையா ஏப்ரல் 19 ஆம் தேதியே எலக்‌ஷனை வச்சிட்டாங்க. மே மாசமெல்லாம் வச்சிருந்தா ‘பின் விளைவுகள்’ கடுமையா இருக்கும்னு மேடையில பேசுற மாதிரியே பேசினாரு… நான் புரிஞ்சுக்கிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
நிமிட கதை :
வாழ்க்கையில் உயரமான இடத்துக்கு போவீங்க – ஜோசியக்காரரின் வாக்கு
‘லிப்ட் ஆப்பரேட்டர்’ வேலைக்கு அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வந்தது

சப்பாணி
இப்பிடியே போனால்.. எல்லார் வீட்டிலும் ஃபேனுக்கு பதில் ஏ.சி தான் இருக்கும்
வெயில்

ℳsd இதயவன்
“நாமும் உதயநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பெயர் வைப்போம்…” – அண்ணாமலை பிரச்சாரம்
இதனால அருணாச்சலப் பிரதேசத்தில் சைனாகாரன் பேர் வைக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லையே?!

கடைநிலை ஊழியன்
எவ்ளோ வெயில் அடிச்சாலும் சில விஷயங்கள நான் செய்யாம இருக்க மாட்டேன்..
அதுல ஒண்ணு, உச்சி வெயிலையும்.. டீ குடிக்குறது..

பர்வீன் யூனுஸ்
ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அம்பானி முதலிடம், அதானி 2-ம் இடம்
மோடியின் பத்தாண்டு சாதனை என்னன்னு கேட்டவங்கல்லாம் யாருப்பா?

கடைநிலை ஊழியன்
நான் தான் வீக்கென்ட் வந்திருக்கேன்..
தெரியுங்க.. ரொம்ப லேட்டா வருவீங்க.. ஆனா வேகமா போயிருவீங்க..

balebalu
முதல் பிரதம மந்திரி நேரு ன்னு அவங்களுக்கு தெரியல்லையே ன்னு உனக்கு கவலை
சுபாஷ் சந்திர போஸ் ன்னு ஒருத்தர் இருந்தார் ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கே ன்னு எனக்கு சந்தோசம்

கோழியின் கிறுக்கல்!!
சூரியன் கிட்ட, யாரோ “தீயா வேலை செய்யணும் குமாரு”ன்னு சொல்லிட்டாங்க போல!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

“அதிமுகவை அழிக்க நினைத்தால் இந்த நிலைமைதான்” : ஓபிஎஸ் பெயரை சொல்லாமல் பேசிய ஈபிஎஸ்

“திமுகவால் முடியுமா என கேட்டவர்களுக்கான பதில்”: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஸ்டாலின் வரவேற்பு!

+1
1
+1
6
+1
1
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *