திமுக கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்ரல் 5) மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது.
அதில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு, மார்ச் 2024 வரை பெறப்பட்ட கல்விக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி
OBC, SC, ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை 50%க்கு மேல் உயர்த்த அரசியல்சட்டத் திருத்தம்
ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை
ஒன்றிய அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி – மருத்துவமனை
மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்துப் புதிய கல்விக் கொள்கை மறுஆய்வு’
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)
மீனவர்கள் மீதான தாக்குதல்கள், கைதுக்குத் தீர்வு
100 நாள் வேலை திட்ட ஊதியம் நாளொன்றுக்கு 400 ரூபாயாக உயர்வு
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கைவிடப்படும்
தற்போதுள்ள ஜிஎஸ்டி முறை கைவிடப்பட்டுப் புதிய ஜிஎஸ்டி 2.0 முறை அறிமுகம்
புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி, ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி
அக்னிபத் திட்டம் ரத்து” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், “அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழகத்தின் உரிமைகளை மீட்க, இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான திமுகவால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.
அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் : பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
மயிலாடுதுறை : சிறுத்தையை பிடிப்பதில் சிரமம்!