உலகின் மிகப் பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் கடந்த 1810ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பீர் திருவிழா அந்த நாட்டு பட்டத்து இளவரசர், பட்டத்து இளவரசியின் திருமண நாளை நினைவுகூரும் விழாவாகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3ஆம் தேதி வரை இந்த பீர் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த பீர் திருவிழாவில் 60 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தற்போது வரை 34 லட்சம் பேர் திரண்டு பீர் திருவிழாவைக் கொண்டாடி உள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற இந்தத் திருவிழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள மது பிரியர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் திளைத்து வருகின்றனர். பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடை அணிந்த ஆண்கள், பெண்கள் மெய்மறந்து உற்சாகத்தில் மிதக்கின்றனர். கொரோனா காலமாக கடந்த மூன்று ஆண்டுகளாக களைகட்டாத பீர் திருவிழா மீண்டும் பழைய குதூகலத்தை எட்டியுள்ளது.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!