மோடியின் வடக்கு வாதம்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஆபீஸ்ல டிவி பாத்துட்டு இருக்கும் போது அடிக்கடி, ‘இது மோடியின் உத்தரவாதம்’னு விளம்பரம் வந்துச்சு.

பக்கத்துல இருந்த நம்ப தம்பி, ‘மோடிக்கு எப்பொழுதுமே வடக்கு மேல தான் அதிக ஆசை. தெற்க பத்தி அவருக்கு கவலையே கிடையாது. இதுக்கு இந்த விளம்பரமே சாட்சி’ அப்படின்னு சொன்னாப்ள.

விளம்பரம் எப்படி சாட்சியாக முடியும்னு கேட்டேன்.

‘அண்ணே… உத்தரவாதம்ன்ற வார்த்தையில உத்தர்னா வடக்கு. உத்தரவாதம்னா வடக்கு வாதம்தானே. என்னோட ட்ரான்ஸ்லேஷன் கரெக்டா?’ அப்படின்னு கேட்டாப்ள.

டிவிய ஆஃப் பண்ணிட்டு நானும் ஆஃப் ஆயிட்டேன்‌

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
தேர்தல் – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – சூன் 4
# ” அச்சத்தில் ” …..EVM

வசந்த்
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்!
வாசல்லயே நிற்கிறது அதிமுககாரங்க ~ Hi… Chellam

mohanram.ko
எம்.பி., எம்.எல்.ஏ-வாக அரசியலுக்கு வரவில்லை!’ – அண்ணாமலை!
ஸ்ட்ரெய்ட்டா சிஎம் தான்… நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் வெயிட் பண்றேன்

வசந்த்
திமுகவை மிஞ்சும் வகையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. -பொன்.ராதாகிருஷ்ணன்.
எது இந்த “சமக” இணைந்ததா?

மயக்குநன்
எனது 10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரெய்லர்தான்!- பிரதமர் மோடி.
அதிலேயேதான் எக்கச்சக்கமான ‘படம்’ காட்டிட்டீங்களே..?!

கடைநிலை ஊழியன்
மேனேஜர் கிட்ட லீவ் கேட்கும் போது..
மேனேஜர் – முதல்ல என்கிட்ட இந்த மாதிரி லீவ் கேக்குறதே தப்பு..

ச ப் பா ணி
தேர்தல் நடைமுறை வந்துவிட்டதால் ரூ50,000 மேல வெளியே எடுத்து செல்ல வேண்டும்
#என்கிட்ட பர்ஸே இல்லடா..
G pay மட்டும்தான்

தர்மஅடி தர்மலிங்கம்
‘எம்.பி., எம்.எல்.ஏ-வாக அரசியலுக்கு வரவில்லை!’ – அண்ணாமலை!
பின்ன…. ஆளுநராக அரசியலுக்கு வந்தீங்களோ.?!

மயக்குநன்
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் எப்படி பெறுவது என்று எங்களுக்குத் தெரியும்!- துரைமுருகன்.
நாலஞ்சு கேன்களில் அடைச்சுக் கொண்டு வந்துடுவார் போல..?!

நெல்லை அண்ணாச்சி
” மலரும் நினைவுகள் ”
குஜராத் மோடியா,..,!!? இந்த தமிழ்நாட்டு…லேடியா..!!?

வசந்த்
“தேர்தல் பத்திர நிதி மூலம் பாஜக மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது” -முதல்வர் ஸ்டாலின்
சைஸ்ல என்ன இருக்கு சார் அவங்க நம்பர் ஒன் ஊழல்வாதி நீங்க நம்பர் டூ ஊழல்வாதி அவ்வளவு தான்.

கடைநிலை ஊழியன்
ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா தெரிஞ்சுக்கோங்க..
காலைல கறிக்கடை ‘லையும்.. நைட் ஆனா ஹோட்டல் ‘லையும், கூட்டம் இல்லைனா.. அது ஞாயிற்றுக் கிழமையே கிடையாது…

mohanram.ko
நல்ல வேளை, பாண்டு வாங்கின நம்ம கட்சிக்காரங்களை கண்டுக்கல
டேய், நம்மாளுங்க வாங்கியது, சித்தாள் வேலைக்கு தேவையான பாண்டு டா

balebalu
குஷ்பு மட்டும் தான் அந்த வார்த்தை சொல்லனுமா
இதோ நானும் சொல்லுறேன் NirmalaSitharaman
சபாஷ் சரியான போட்டி

ச ப் பா ணி
சிறிய கட்சியில் இருந்துகொண்டு பெரிய கட்சிக்கு போவது.. டிப்ளமோ முடிச்சிட்டு..நேரடியாக செகண்ட் இயர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வது மாதிரி

ℳsd இதயவன்
நிவாரணத் தொகை என்பது பிச்சை. – நிர்மலா சீதாராமன் ~
அப்ப விவசாயிகளுக்கு வருடம் 6000 தர்றீங்களே அது எந்த கணக்கில் வரும் ?!

mohanram.ko
வீட்டு சமையலா இல்லை ஸ்விக்கியா என்பதை அவர்கள் அளிக்கும் ஆஃபரே முடிவு செய்கிறது

கோழியின் கிறுக்கல்!!
எப்படி exercise பணறதுக்கு Treadmill வாங்குறது வெட்டி செலவோ ,
அதே மாதிரி தான் வெயிலுக்கு Air Cooler வாங்குறதும்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

ELECTORAL BOND: “பாவப்பணத்தை பெற்ற திமுக- எடப்பாடி விமர்சனம்” – டி.ஆர்.பாலு பதிலடி!

ஐபிஎல் : சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி!

 

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *