ஈரோடு கிழக்கு தேர்தல் களம் களைகட்டியிருக்கும் நிலையில், இன்று திமுக சார்பில் மூன்று பேர் அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வேடம் அணிந்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கில் அதிமுக, திமுக, நாதக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மொத்தம் 77 பேர் தேர்தல் ரேஸில் உள்ளனர்.
திமுக சார்பில் அமைச்சர்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், அவர்களது ஆதரவாளர்கள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
திமுகவினர் பரோட்டா சுட்டால், அதிமுகவினர் டீ போடுவது என போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஓடி வாக்கு சேகரித்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலானது.
அதுபோன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு, சி.விஜயபாஸ்கர் முட்டை தோசை போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தனர்.
இதுபோன்று தேர்தல் களம் பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பேரை மக்கள் வாய் பிளந்து பார்த்தனர்.
காரணம் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக வாக்குசேகரித்த மூவர் பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் போன்று வேடமணிந்து வாக்கு சேகரித்தனர்.
வீதியில் நின்றுகொண்டிருக்கும் மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று ஸ்டாலின் வேடத்திலிருந்தவர் சொல்ல, அண்ணா, கலைஞர் வேடமணிந்திருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டவாறு வந்தனர்.
அவர்களை வாய் பிளந்து பார்த்த ஈரோடு கிழக்கு மக்கள், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டும் மகிழ்ந்தனர்.
பிரியா
முத்தக் காட்சியில் ஏன் நடித்தேன் தெரியுமா? விளக்கம் கொடுத்த குட்டி நயன் அனிகா
டெல்லியில் பயங்கரம் : ‘லிவ் இன்’ காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்!