உலகம் முழுவதும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமூக வலைதளமான ட்விட்டருக்கு 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ட்விட்டர் சேவை முடங்கியுள்ளது.
டவுன் டிடெக்டர் தரவுபடி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் ட்விட்டர் வேலை செய்யவில்லை என்று புகார் அளித்துள்ளனர். ட்விட்டரில் எந்த ஒரு தேடுதலை மேற்கொண்டாலும், ‘மீண்டும் முயற்சிக்கவும்’ என்று காட்டுகிறது.
ஏற்கனவே பதிவிடப்பட்ட பதிவை பார்க்க சென்றால் “ட்வீட்டை மீட்டெடுக்க முடியவில்லை” என வருகிறது.
மாலை 6 மணி முதல் 2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய சமூக வலைதளமான ட்விட்டர் முடங்கியதால் பயனாளிகள் ட்விட்டர் டவுன் என பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் 11,800 ட்விட்களுடன் #TwitterDown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு இதுபோன்று முடங்குவது மூன்றாவது முறையாகும். இன்று ட்விட்டர் வேலை செய்யாதது தொடர்பாக அந்நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி தொடர்பு- அப்பல்லோ, சிம்ஸ் மருத்துவமனைகளில் ED ரெய்டு!
முதன்முறையாக உலகக்கோப்பை சாம்பியனுக்கு நேர்ந்த கதி!