இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(நவம்பர் 16) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிட உள்ளார் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல், நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அட்டவணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாத ஆரம்பத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேவரி போஹா, இனிப்பு போஹா
பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே திரெடிங் செய்ய எளிய வழிகள்!