தமிழகத்தில் களைகட்டிய ரமலான்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

Published On:

| By Selvam

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 11) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அனைவரும் நோன்பை கடைபிடிப்பார்கள். அதன்படி மார்ச் 11-ஆம் தேதி ரமலான் நோன்பு துவங்கியது. இந்த காலகட்டத்தில் விடியலுக்கு முன்பாக சஹர் எனப்படும் உணவு சாப்பிட்டு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள்.

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தமிழகத்தில் ரமலான் பண்டிகைக்கான பிறை பார்க்கப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 11-ஆம் தேதியான இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரமலான் பண்டிகையை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்வது தவறு: எச்சரித்த ஜோ பைடன்

பியூட்டி டிப்ஸ்: பெண்கள் முகத்தில் தாடி… ஷேவ் செய்வது நல்லதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share