chennai nellai vande bharat

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை எப்போது தொடங்கும்?

தமிழகம்

நெல்லை, குமரி, தென்காசி , தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களைச் சார்ந்த பலர் சென்னையில் தங்கியிருந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

சென்னையில் இருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் தினசரி அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் பேருந்து, ரயில்களில் இருக்கைகள் கிடைக்காமல், பயண கட்டணமும் பல மடங்கு அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

மேலும் அவசர காலத்திலும் திடீரென சொந்த ஊருக்கு கிளம்பி செல்ல வேண்டிய சூழ்நிலையிலும் பலரும் அவதிக்குள்ளாகி வந்தார்கள்.

இந்த நிலையில் தான் சென்னையில் தங்கி வேலை புரியும் தென் மாவட்ட மக்களுக்காக மத்திய அரசிடம் இருந்து ஒரு தித்திப்பான செய்தி வந்தது என்றால் அதுதான் சென்னை – நெல்லை இடையே “வந்தே பாரத்” ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு.

நெல்லை – சென்னை இடையே ரயில் சேவை எப்பொழுது?

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை – மைசூரு, சென்னை – கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை – மைசூரு இடையே ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார்.

அதேபோன்று சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை  ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர்  மோடி துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டது. இந்த செய்தியால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால்,  தேதி இன்று 8 ஆகியும் நெல்லை – சென்னை இடையே இன்னும் வந்தே பாரத் ரயில் சேவை வெறும் அறிவிப்போடு நிற்பதாக பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ரயில் சேவை தொடங்கும் மாற்றுத் தேதிக்கான உறுதியானஅறிவிப்பும் இன்னும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் வெளியாகவில்லை.

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை!

வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயிலானது, திருச்சி, மதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் கார், எக்கனாமிக் சேர் கார் ஆகிய 2 வகுப்புகள் உள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும்.

வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமலிங்கம்

”மோடி பதவி விலக வேண்டும்”: காரணங்களை அடுக்கிய திருமாவளவன்

கணவனை ‘கருப்பன்’ என அழைப்பது கொடுமையானது : நீதிமன்றம்!

+1
0
+1
1
+1
1
+1
7
+1
2
+1
2
+1
2

Comments are closed.