ஆண்களைப் போலவே சில பெண்களுக்கும் முகத்தில் குறிப்பிட்ட சில இடத்தில் மட்டும் தாடி முளைக்கும். அதை அடிக்கடி ஷேவ் செய்து நீக்கிவிடுவார்கள். இப்படிச் செய்வது நல்லதா? இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன? தீர்வு உண்டா?
“முதலில் இந்தப் பிரச்சினைக்கான காரணம் அறிந்துதான் இதற்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
“ஓரிடத்தில் மட்டும்தான் இப்படி முடி வளர்ச்சி இருப்பதாக இருந்தால் தாடைப் பகுதியின் சருமத்தில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டதன் விளைவாக அங்கு மட்டும் இப்படி முடி வளர்ச்சி இருக்கக்கூடும்
ஆண் தன்மையை அதிகரிக்க கூடிய ‘டெஸ்டோஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதும் பெண்களுக்கு முடி வளரக் காரணமாக அமையும். ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடிய இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் முகத்தில் முடி வளருவதற்கான வாய்ப்புகள் 85 சதவிகிதம் உள்ளது.
காரணம் என்னவாக இருந்தாலும் முகத்திலுள்ள ரோமங்களை ஷேவ் செய்து அகற்றுவது என்பது மிகவும் தவறானது. ஒருமுறை ஷேவ் செய்வதால் அடுத்த முறை அந்தப் பகுதியில் வளரும் ரோம வளர்ச்சியானது இன்னும் அடர்த்தியாகுமே தவிர, குறையாது.
சரும மருத்துவரைச் சந்தித்து, இந்தப் பிரச்சினையை `லேசர் ஹேர் ரிடக்ஷன்’ (Laser hair reduction) சிகிச்சை முறையில் நீக்கிக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். அதன் மூலம் அந்தப் பகுதியில் ரோம வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குக் வித் கோமாளி 5: போட்டியாளர்கள் லிஸ்ட் கசிந்தது… அட இவங்க கூட வர்றாங்களா..?
“அதிமுக எப்படியாவது 2ஆவது இடத்துக்கு வந்துருங்க… பிஜேபிய விட்றாதீங்க…” : எ.வ.வேலு பிரச்சாரம்!
டி20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கு இடம் உள்ளதா? இல்லையா?