தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 16) தொடங்கி மார்ச் 19 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
மார்ச் 2௦, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
இன்று தொடங்கி நாளை (மார்ச் 17) வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழகத்தின் உள்பகுதிகளில் வசிப்போருக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு, சேலம் மாவட்டங்கள் தலா 39.6 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஷ்வகுருவா? மவுனகுருவா? : மோடியை சாடிய ஸ்டாலின்
Rohit Sharma: கேப்டன் ‘பதவியில்’ இருந்து நீக்கிட… உண்மையான காரணம் இதுதான்!