residential areas were flooded with sewage in vellore kamarajapuram

குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீர்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

தமிழகம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே நேற்று இரவு  பலத்த மழையால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர், போலியான சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.

அதன்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழு அமைத்து போலி ஜாதி சான்றிதழை கொடுத்து தேர்தல் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.

இதையடுத்து ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.

இந்த நிலையில் காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது.

மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழைநீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கழிவுநீருடன் கலந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து உயரதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்

சென்னை: விநாயகர் சிலைகள் ஊர்வல வழித்தடங்களும் கரைக்கும் இடங்களும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை முட்டை பொரியல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *