பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்ய சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூர் கோமநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 5 பேர் கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் சென்றனர்.
அப்போது ராஜேஷ் தாஸ் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.
தற்போது வரை ராஜேஷ் தாஸ் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைத் தேடி விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழ்நாட்டின் ‘டாப் 3’ வெப்ப மாவட்டங்கள் இதுதான்!
செஸ் வரி மூலம் 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மடைமாற்றம்: அம்பலப்படுத்திய ஜெயரஞ்சன்