jacto geo protest press meet

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சொன்னதைச் செய்வாரா முதல்வர்?

தமிழகம்

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசியுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (பிப்ரவரி 5) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் முடிவில் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கி.மகேந்திரன் பேசும்போது,

“ஏப்ரல் 1- 2023-க்கு பிறகு நடைமுறையில் உள்ள தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அதைப்போலவே ஒன்றிய அரசு அறிவிக்கும் அதே நாளில் மாநில அரசும் அகவிலைப்படி உயர்வினை அறிவித்திட வேண்டும்.

சரண் விடுப்பின் மீதான முடக்கி வைத்திருக்கக் கூடிய அரசாணையை ரத்து செய்து உடனடியாக அந்த தடையை நீக்கி ஆசிரியர்களும் ஊழியர்களும் பணியாளர்களும் சரண் விடுப்பை ஒப்படைத்து பணமாக்கிக் கொள்வதற்காக விரைந்து வழங்கிட வேண்டும்.

அதுபோலவே சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்திட வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களின் பணிக்காலங்களை முறைப்படுத்தி நிரந்தர பணியிடங்களாக அறிவித்திட வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமித்திட வேண்டும்.

வாழ்வாதார கோரிக்கை, சிபிஎஸ் திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் குறித்து நன்கறிந்த இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

உடனடியாக ஜேக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி மேற்கண்ட கோரிக்கைகளைத் தீர்த்து வைத்திட வேண்டும் என்று வாழ்வாதார கோரிக்கை மீட்பு உண்ணாநிலை அறப்போராட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், எங்களது கடந்த கால போராட்டக் களத்திற்கு வந்து எங்களோடு தோள் நின்று தோள் கொடுத்து, உங்களது நியாயமான கோரிக்கைகளை நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று நிறைவேற்றித் தருகிறோம் என்று எங்களிடம் உறுதி கூறியிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழக முதல்வர், உங்களது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் பயணிக்கின்றோம்” என பேசினார்.

மோனிஷா

திராணி இருந்தால்… : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்

தெருநாய் தொல்லை: தீர்வு கூறி சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *