மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!

Published On:

| By christopher

Lok Sabha Elections: 72.09% voter turnout in Tamil Nadu!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்  நிறைவடைந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களுக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையில் தமிழ்நாட்டில் 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

தற்போது வாக்குப்பதிவு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக தருமபுரியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகி உள்ளது.

புதுச்சேரியில் மொத்தமாக 7 மணி நிலவரப்படி 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் மாலை 7 மணி வரை பதிவான வாக்குகளின் நிலவரம் பின்வருமாறு,

  1. கள்ளக்குறிச்சி – 75.67%
  2. தர்மபுரி – 75.44%
  3. சிதம்பரம் – 74.87%
  4. பெரம்பலூர் – 74.46%
  5. நாமக்கல் – 74.29%
  6. கரூர் – 74.05%
  7. அரக்கோணம் – 73.92%
  8. ஆரணி – 73.77%
  9. சேலம் – 73.55%
  10. விழுப்புரம் – 73.49%
  11. திருவண்ணாமலை – 73.35%
  12. வேலூர் – 73.04%
  13. காஞ்சிபுரம் – 72.99%
  14. கிருஷ்ணகிரி – 72.96%
  15. கடலூர் – 72.40%
  16. விருதுநகர் – 72.29%
  17. பொள்ளாச்சி – 72.22%
  18. நாகப்பட்டினம் – 72.21%
  19. திருப்பூர் – 72.02%
  20. திருவள்ளூர் – 71.87%
  21. தேனி – 71.87%
  22. மயிலாடுதுறை – 71.45%
  23. ஈரோடு – 71.42%
  24. திண்டுக்கல் – 71.37%
  25. திருச்சிராப்பள்ளி – 71.20%
  26. கோயம்புத்தூர் – 71.17%
  27. நீலகிரி – 71.07%
  28. தென்காசி – 71.06%
  29. சிவகங்கை – 71.05%
  30. ராமநாதபுரம் – 71.05%
  31. தூத்துக்குடி – 70.93%
  32. திருநெல்வேலி – 70.46%
  33. கன்னியாகுமரி – 70.15%
  34. தஞ்சாவூர் – 69.82%
  35. ஸ்ரீபெரும்புதூர் – 69.79%
  36. சென்னை வடக்கு – 69.26%
  37. மதுரை – 68.98%
  38. சென்னை தெற்கு – 67.82
  39. சென்னை சென்ட்ரல் – 67.35%

கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதம் குறைவு!

தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73.02 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்த 2014 மக்களவைத் தேர்தலில், வாக்குப் பதிவு விகிதம் சற்றே அதிகரித்து 73.74 ஆக இருந்தது.

எனினும் 2019 மக்களவைத் தேர்தலில், வாக்குப்பதிவு விகிதம் குறைந்து 72.47 சதவீதமாகப் பதிவானது.

இந்த நிலையில் இந்தாணடு 2024 மக்களவைத் தேர்தலில் மேலும் வாக்குப்பதிவு விகிதம் குறைந்து 72.09 சதவீதமாக பதிவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அரசு அலுவலர்கள் ஆதங்கம்… அரசாணையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!

”மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” : அண்ணாமலை

ஒரே படம் தான்… BMW கார் வாங்கிய சிவகார்த்திகேயன் இயக்குநர்

மக்களவை தேர்தல் : தமிழ்நாட்டில் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share