கொட்டும் மழை : எங்கெங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published On:

| By Kavi

கனமழை காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி நேற்று இரவு முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால் அலுவலகத்துக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரியா

‘இனி ஒரே சாதி தான்’ – சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா? கி.வீரமணி

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment