வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 10) விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளான, பூவிருந்தவல்லி, தாம்பரம், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காற்றுடன் கூடிய கன மழைபெய்ததால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் பகுதியில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பெய்த கன மழையால் வார சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கன மழை பெய்தது.
மயிலாடுதுறை, திருப்பத்தூர், வேலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செல்வம்
இந்து என்ற தொகுப்பும், ஜாதி என்ற பிரிவினையும் ‘ஆரிய மாயை’ நூல் குறிப்பிடும் வழக்கை ஆராய்வோம்
2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி!