இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்: 60.96% வாக்குப்பதிவு!
13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) நிறைவடைந்தது.
18-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
அந்தவகையில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் முடிந்தது.
இந்தநிலையில், இரண்டாம் கட்ட தேர்தலானது கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
காலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு வெயிலின் தாக்கத்தால் மதியம் சற்று சுணக்கமடைந்தது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் பொதுமக்கள் அதிகளவில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர்கள் மம்முட்டி, பிரகாஷ் ராஜ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட திரைபிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மாலை 5 மணி நிலவரப்படி 60.96 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 77.53 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 52.74 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.
மணிப்பூர் – 76.06%
மேற்குவங்கம் – 71.84%
சத்தீஸ்கர் – 72.13%
அஸ்ஸாம் – 70.66%
மகாராஷ்டிரா – 53.51%
பிகார் – 53.03%
மத்திய பிரதேசம் – 54.83%
ராஜஸ்தான் – 59.19%
கேரளா – 63.97%
கர்நாடகா – 63.90%
ஜம்மு காஷ்மீர் – 67.22%
திரிபுரா – 77.53%
உத்தரபிரதேம் – 52.74%
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சல்யூட் மேஜர் முகுந்த்: “அமரன்” டீம் வெளியிட்ட வீடியோ!
ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!