‘இனி ஒரே சாதி தான்’ – சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா? கி.வீரமணி

அரசியல்

ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் ‘இனி ஒரே சாதி தான்’ என்று சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசிடும் பேச்சு உண்மையாகவே பெண்கள் உரிமையில் அக்கறை காட்டும் கருத்துதான் என்றால்,

கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் ஊறுகாய் ஜாடியில் ஊறிடும் 33 சதவீத மகளிர் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் அழுத்தம் கொடுப்பாரா? 

அதுபோலவே, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என்ற வரிசையில், தற்போதுள்ள அறுதிப் பெரும்பான்மையை பயன்படுத்தி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக அரசு ”இனி ஒரே சாதி தான்” என்ற ஒரு அவசரச் சட்டத்தையோ அல்லது நாடாளுமன்றம் மூலம் தனிச் சட்டத்தையோ கொண்டு வந்து நிறைவேற்றிட முன்வந்து,

எங்களின் குரல் உண்மையான கொள்கை நிலைப்பாடு மாற்றமே தவிர, வெறும் உதட்டளவிலான உருமாற்ற உச்சரிப்பல்ல என்பதை உலகுக்கு உணர்த்திட முன் வரலாமே ஆர்எஸ்எஸ்.

‘ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ’, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இந்த ‘அதிசயம், அற்புதத்தை’ நிகழ்த்த முடியும்.

எனவே, உருமாற்ற வித்தைகளைக் கண்டு ஏமாற மக்கள் தயாராக இல்லை. மாற்றம் வேறு; ஏமாற்றம் வேறு என்பதைப் புரிந்தவர்கள்தான் இன்றைய இளைஞர்கள்.

2024-ல் வாக்களிக்கப் போகும் வாக்காளர்களே… இதை நினைவில் நிறுத்துங்கள்!” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

-ராஜ்

நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!

வேலைவாய்ப்பு : ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *