தொடரும் கொள்ளை சம்பவங்கள் : டிஜிபி உறவினரிடம் கைவரிசை!

தமிழகம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, வங்கி முதல் டிஜிபியின் உறவினர் வரை தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கத்தி முனையில் கொள்ளை

சென்னையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில், நேற்று வடபழனியில் தீபக் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேபிடல் என்ற நிதி நிறுவனத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது.

பணியில் இருந்த இரண்டு ஊழியர்களை 8 பேர் கொண்ட குழு கத்தியைக் கொண்டு மிரட்டி 30 லட்சம் பணத்தைக் கொள்ளை அடித்து சென்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில், விருகம்பாக்கத்தை சேர்ந்த இக்பால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வரும் நிலையில், கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஆந்திரா, திருச்சி, கர்நாடகா, சென்னை புறநகர் பகுதிகளில் கொள்ளையர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூரில் 31 சவரன் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் வரதராஜா நகரில் அலெக்ஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜிபி உறவினரிடம் கொள்ளை

சென்னை கோயம்பேட்டில், டிஜிபி சைலேந்திர பாபுவின் உறவினர் ஷாம்லி என்பவரது காரில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காரின் கண்ணாடியை உடைத்து ஐபேடு மற்றும் ரூ. 12,500 ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வங்கியில் தொடங்கி நிதி நிறுவனம், வீடு, டிஜிபி உறவினரின் கார் என கொள்ளை சம்பவங்கள் சில தினங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வரும் இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

சென்னை வங்கிக் கொள்ளை: போலீஸின் சேஸிங் அண்ட் த்ரில்லிங் ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.