கடலூரில் சோகம்: நள்ளிரவில் கோர விபத்து!

தமிழகம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (ஜனவரி 2) இரவு காஞ்சிபுரத்தை சேர்ந்த விஜய் வீரராகவன் தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவரது கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் என்ற பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக சென்றுள்ளது.

cuddalore accident 5 dead

அப்போது அவரது கார் மீது மணல் லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜய் வீரராகவன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வம்

உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் பலி!

புத்தாண்டில் சாதனை சதம் அடித்த சிஎஸ்கே வீரர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *