சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (பிப்ரவரி 21) ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 25 அதிகரித்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து ரூ.50,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6338-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் ரூ.77.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் விலையில் பெரிதாக மாற்றமில்லை. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில் இன்று ஒரேயடியாக ரூபாய் 2௦௦ உயர்ந்துள்ளது.
இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது குறையுமா? இல்லை இன்றுபோல திடீரென உயருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஸ்வர்யா புகார்: லைகா ஊழியர்கள் வருத்தம்!
பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்!