அவதூறு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் இன்று (நவம்பர் 19) வெளியே வந்தார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது’ என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி 6 மாத சிறை தண்டனையை வழங்கியது.
தொடர்ந்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஏற்கனவே நிலுவையில் இருந்த 4 வழக்குகள் அடிப்படையில் போலீஸ் சவுக்கு சங்கரை கைது செய்தது.
இதனை அடுத்து 4 வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் 4 வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் இருந்து இன்று(நவம்பர் 19) வெளியே வந்தார்.
சிறையில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்த சவுக்கு சங்கரை, அவரது நண்பர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
கலை.ரா
சவுக்கு சங்கருக்கு கிடுக்குப்பிடி போட்ட நீதிமன்றம்!
பாகிஸ்தானுக்கு உளவு: சிக்கிய வெளியுறவுத் துறை பணியாளர்!