ms swaminathan died today

’பசுமை புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

தமிழகம்

இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98வது வயதில் இன்று (செப்டம்பர் 28) காலமானார்.

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.சுவாமிநாதன், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வேளாண் ஆராய்ச்சியில் பல புதுமைகளை கொண்டு வந்தார்.

இந்தியாவின் குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகள் அதிக மகசூல் உற்பத்தி செய்வதை உறுதிசெய்ய உதவும் அதிக மகசூல் தரும் நெல் வகைகளை உருவாக்குவதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

இதனால் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை  என எம்.எஸ்.சுவாமிநாதன் அழைக்கப்பட்டார்.  உலகளவில் போற்றப்படும் வேளாண் விஞ்ஞானியான அவர் 40க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 1971 இல் ராமன் மகசேசே விருதும், 1986 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருதும், கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதும் வழங்கப்பட்டது.

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி வேளாண் விவசாயத்திற்கு பங்காற்றி வருகிறார்.

வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98வது வயதில் இன்று காலமானார்.

அவரது மறைவையொட்டி இந்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் சித்தார்த்

நலம் விசாரிப்பது எப்படி கூட்டணியாகும்? முத்தரசன் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *