பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கியவர் S.U.அருண்குமார். இவரது இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள “சித்தா” படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல சேனல்களுக்கு நடிகர் சித்தார்த் நேர்காணல் அளித்து வந்த நிலையில், கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து சீரியலிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார். பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுசித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் காட்சியை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
https://www.instagram.com/reel/Cxsc3zXxIXc/?igshid=MzRlODBiNWFlZA%3D%3D
பல குடும்பத் தலைவிகளின் ஃபேவரைட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ப்ரோமோஷன் செய்வதின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவு கிடைக்கும் என படக் குழு எதிர்பார்க்கின்றனர்.
கார்த்திக் ராஜா
தங்கம் விலை: ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சி!
Tiger Ka Message: சல்மான் கானின் “TIGER 3” ப்ரோமோ வெளியானது!