chennai traffic police speed limit

வேக கட்டுப்பாடு: அபராத நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார்!

தமிழகம்

சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடு இன்று (நவம்பர் 4) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்திலும், பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம் என்ற புதிய வேக கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேணடும்.

இந்த வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க நவீன ஸ்பீடு ரேடார் கன் கருவிகள் கிழக்கு கடற்கரை சாலை, சென்ட்ரல், அண்ணா சாலை, மதுரவாயல், பாரிமுனை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கியமான பல பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் நகரின் பல இடங்களில் அபராதம் விதித்து வருகின்றனர்.

காவல்துறையின் இந்த வேக கட்டுப்பாடு நடைமுறைக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் என்று ஒரு சாராரும் போக்குவரத்து போலீசாரின் அபராதம் அதிகமாக உள்ளதால் அடித்தட்டு மக்களை அதிகமாக பாதிக்கும் என்று சிலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

’1 Year of Love Today’: ஸ்பெஷல் வீடியோ வெளியானது!

மழை… எவ்வளவு அடித்தாலும் சென்னை தாங்கும்: அமைச்சர் நேரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *