பிளஸ் டூ தேர்வு: இத்தனை பேர் எழுதவில்லையா?

தமிழகம்

இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழி தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 ஆயிரம் பேர் எழுதுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று (மார்ச் 13) மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருச்சியில் தான் பயின்ற இ.ஆர்.பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.

அதுபோன்று தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் கேள்வித்தாளை வாங்கி பார்த்து, தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவர்களில் 49,559 பேரும், தனித்தேர்வர்களில் 1,115 பேரும் தேர்வை எழுதவில்லை என்றும் தேர்வின் போது வேலூரில் 2 மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகவும் பள்ளிக் கல்வி துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

பிரியா

ஆன்லைன் சூதாட்ட தடை – பேச அனுமதிக்கவில்லை : டி.ஆர்.பாலு

டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு டோக்கன்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

 

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0