one year of love today

’1 Year of Love Today’: ஸ்பெஷல் வீடியோ வெளியானது!

சினிமா

90ஸ் மற்றும் 2கே கிட்ஸின் கவனத்தை ஈர்த்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் “லவ் டுடே”. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது.

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இவர் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் லவ் டுடே படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு பிறகு பிரதீப்பை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பிரதீப்பிற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

காதலர்கள் தங்கள் செல்போனை மாற்றி கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதே லவ் டுடே படத்தின் ஒன் லைன். காதல், சந்தேகம், பிரெண்ட்ஷிப், காமெடி என அனைத்தையும் அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலமாக திரையில் என்டர்டெயின்மென்ட்டாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வழங்கியது தான் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கிலும் லவ் டுடே படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

லவ் டுடே படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ‘1 Year of Love Today’ என்ற போஸ்டர் மற்றும் ஸ்பெஷல் வீடியோவை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் இருவர் சரண்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *