2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் இந்திய அளவில் மாநிலங்கள் எவ்வளவு கடன்கள் வாங்கி உள்ளது என்பதற்கான ஆய்வு முடிவை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி 2022-23ஆம் நிதியாண்டின் முடிவில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தை கடன் 87ஆயிரம் கோடியாக உள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
72 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மகாராஷ்டிரா 2ஆவது இடத்திலும், 63ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன் மேற்கு வங்க மாநிலம் மூன்றாவது இடத்திலும், 57 ஆயிரத்து 478 கோடி ரூபாய் கடன்கள் உடன் ஆந்திர மாநிலம் நான்காவது இடத்திலும், 55 ஆயிரத்து 612 கோடி ரூபாய் கடன்கள் உடன் உத்தரப்பிரதேசம் ஐந்தாவது இடத்தையும் பிடித்து டாப் 5 இடங்களை பெற்றுள்ளது.
இதில் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மாநில வளர்ச்சிக் கடன் எனப்படும் ஏல பத்திரங்கள் மூலம் கடன் பெறுகின்றன.
தணிக்கை செய்யப்படாத சிஏஜி புள்ளிவிபரங்களின் படி தமிழ்நாட்டின் வரி வருவாய் 2021-22ல் ரூ.1,60,324.66 கோடியிலிருந்து 2022-23ல் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டுக்கான வரி வருவாய் ரூ.1,88,953.57 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வருவாய்க்கான செலவு என்பது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. அதன்படி 2021-22ல் ரூ.2,47,5,79.99 கோடியாக இருந்த வருவாய் செலவீனம், 2022-23ல் ரூ.2,69,562.94 கோடியாக உயர்ந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்!