உதயநிதி இல்லத்தில் மு.க. ஸ்டாலின், கனிமொழி

By Mathi

|

Published on 29 Nov 2026, 3:42 PM

MK Stalin- udhayanidhi

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனையில் தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்றார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.யும் உதயநிதி இல்லத்துக்கு சென்றார். அங்கு இந்தியா கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர் சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசுவதற்காக சென்னை வந்துள்ள சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், அதே நேரத்தில் ஸ்டாலினைச் சந்திக்க டிரைடென்ட் ஹோட்டலிலிருந்து புறப்பட்டனர்.

ADVERTISEMENT

இதனிடையே, மு.க. ஸ்டாலின் இல்லத்தில் திமுக எம்.பி.க்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் உள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel