மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது பற்றி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”சோனியா- ராகுல் காந்தி உள்ளிட்டோர் சென்னை வருவதாக நீங்கள் சொல்லித்தான் தெரியும்.. அவர்கள் வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. தொகுதி மறுவரையறை மசோதா குறித்த முடிவை தலைவர் ஸ்டாலின்தான் எடுப்பார்” என்றார்.









