அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள்.. ஸ்டாலினை சந்திக்க வருகிறேன்.. ராகுல் பிடிவாதம்! கார்கே வீட்டில் கனிமொழி.. என்ன நடக்கிறது?

By Mathi

|

Published on 29 Nov 2026, 10:15 AM

Delimitation-Rahul Gandhi- Stalin

பாஜகவின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் முடிவால் இந்திய அரசியலே பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்த முடிவை திமுக கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் நயாப் சிங் சைனி, கேரளா முதல்வர் சதீஷன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் இன்று சிறப்பு விமானத்தில் சென்னை வரத் தயாராக உள்ளனர்.

நானும் சென்னை வருகிறேன்.. ராகுல் காந்தி

இந்நிலையில் சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, “நீங்கள் சென்னைக்கு செல்ல வேண்டாம்; நானே சென்னை சென்று ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுகிறேன்” என ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் சோனியா காந்தி, “நானும் சென்னைக்கு வருகிறேன்.. நான் நேரில் வந்து ஸ்டாலினை சந்தித்து பேசினால் முடிவை மாற்றிக் கொள்வார்.. அதனால் நானும் வருகிறேன்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

கார்கே வீட்டில் கனிமொழி

இந்த நிலையில் சென்னையில் மு.க. ஸ்டாலினை சந்திக்க மல்லிகார்ஜூன கார்கே தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள கனிமொழியை தொடர்பு கொண்ட ஸ்டாலின், கார்கேவை நேரில் சந்தித்து, ”நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம்.. எங்களை நேரில் சந்தித்து தர்மசங்கடத்துக்குள்ளாக்க வேண்டாம்” என தெளிவுபடுத்துமாறு தெரிவித்தார்.

இதனையடுத்து மல்லிகார்ஜூனா கார்கே வீட்டுக்கு கனிமொழி சென்றுள்ளார். தற்போது கார்கேவுடன் பேசிவரும் கனிமொழி, “நாங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டோம்.. சென்னைக்கு செல்ல வேண்டாம்” என கார்கேவிடம் கூறி வருகிறார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel