தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இன்று (நவ. 29) முற்பகல் சிறப்பு விமானத்தில் சென்னை வரத் திட்டமிட்டுள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து, கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, திமுகவின் முடிவைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையிலான தலைவர்கள் குழு இன்று முற்பகல் 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகின்றனர். சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் இந்த குழு, மக்களவையில் நாளை பாஜக அரசு தாக்கல் செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் முடிவைத் திமுக திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலினிடம் அவர்கள் நேரில் வலியுறுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் சோனியா காந்தி தலைமையிலான தலைவர்கள் குழு டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளது.









