திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் பொதுமக்கள் தீபம் ஏற்ற அனுமதி

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Nov 2026, 11:00 AM

Thirupparankundram

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், மலை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்றலாம் எனகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் (மேனாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர் நீதிமன்றம்) மற்றும் வி. பார்த்திபன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்) ஆகியோரது நேரடி மேற்பார்வையில், நேற்று (28.11.2026) மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் 29.11.2026 முதல் 15.12.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றிச் சட்டம்-ஒழுங்கைப் பேண வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel