சென்னைக்கு வர விமான நிலையத்துக்குப் புறப்பட்ட சோனியா, ராகுல் காந்தி! தனி விமானத்தில் சென்னை வரும் அகிலேஷ்!

By Mathi

|

Published on 29 Nov 2026, 10:28 AM

Delimitation-Rahul Gandhi- Stalin- Sonia

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள தங்கள் இல்லத்திலிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனர். இதனிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று (நவ. 29) சென்னை வருகின்றனர்.

ADVERTISEMENT

பாஜகவின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் முடிவால் இந்திய அரசியலே பரபரத்துக் கொண்டிருக்கிறது. இந்த முடிவை திமுக கைவிட வேண்டும் என மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் நயாப் சிங் சைனி, கேரளா முதல்வர் சதீஷன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் டெல்லில் இருந்து முற்பகல் 11 மணிக்கு புறப்படும் சிறப்பு விமானத்தில் சென்னை வருகின்றனர்.

இதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனர். இவர்களுடன் தனி விமானத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சென்னை வருகிறார்.

ADVERTISEMENT

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு சோனியா காந்தி தலைமையிலான குழு மும்பை செல்கிறது. மும்பையில், பாஜகவின் மசோதாவை ஆதரிக்க உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் இக்குழு சந்தித்து பேசுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel