தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் முடிவைத் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் டெல்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் வி.டி. சதீசன், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் சிறப்பு விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை வந்து சேரும். சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் மாலை 6 மணிக்கு இந்த குழுவினர் மும்பை செல்கின்றனர். மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து, பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என வலியுறுத்த உள்ளனர்.









