டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி… கார்கேவிடம் சொன்னது என்ன?

By Mathi

|

Published on 29 Nov 2026, 3:20 PM

Kanimozhi Chennai Return

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்த நிலைப்பாட்டையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் எடுத்துரைத்ததாகக் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி, இன்று (நவ. 29) பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதைத்தான் எங்களால் சொல்ல முடியும். அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது ஊடகங்கள் வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டை எங்கள் தலைவர் நேற்று எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டித் தெரிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டையே டெல்லியில் கார்கேவிடம் தெரிவித்தேன். இந்தியா கூட்டணித் தலைவர்கள் எங்கள் தலைவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். சந்திப்பு முடிந்த பிறகு என்ன என்று சொல்கிறோம். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel