நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடும் நிலையில், தொகுதி மறுவரை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர்கள் சந்திக்க உள்ளனர்.
இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்துள்ளதால் இன்று இந்திய அரசியலின் மையப்புள்ளியாக தமிழகம் உள்ளது. இந்நிலையில் , தனது வீட்டிலிருந்து புறப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயாரை சந்திக்க உள்ளார். மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிய உள்ளார்.
இன்று மாலை 4 மணி அளவில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே தாயாரை சந்திக்க கிளம்பிய ஸ்டாலின்
By Pandeeswari Gurusamy
|
Published on 29 Nov 2026, 2:41 PM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Pandeeswari Gurusamy
ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel














