“கூட்டணி மாற்றத்தை இன்னும் கண்ணியத்துடன் கையாண்டிருக்கலாம்!” – திமுக – காங்கிரஸ் உறவு குறித்து மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Nov 2026, 2:20 PM

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரதித்துள்ள சூழலில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வலியுறுத்த, சோனியா காந்தி, ராகுல் , கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்கு வர உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்கு மாறிய விதத்தையும் அந்த மாற்றத்தையும் இன்னும் கூடுதல் கண்ணியத்துடனும் நயத்துடனும் மரியாதையுடனும் கையாண்டிருக்கலாம் என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கார்த்தி சிதம்பரம் எம்பி, “தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணி மாறிய விதம் குறித்து திமுக அதிருப்தியில் உள்ளது. அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அந்த மாற்றத்தை இன்னும் சிறப்பாகவும், கூடுதல் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கையாண்டிருக்கலாம். அதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தாலும், திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் நிலையான ஆட்சியை வழங்கக்கூடிய ஓர் அணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்புக்காகக் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகக் காத்திருந்தது. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் காங்கிரஸ் தொண்டர்களிடம் இயல்பாகவே இருந்தது.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்கு மாறிய விதத்தையும் அந்த மாற்றத்தையும் இன்னும் கூடுதல் கண்ணியத்துடனும் நயத்துடனும் மரியாதையுடனும் கையாண்டிருக்கலாம் என்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel