மு.க.ஸ்டாலினை மாலை 4 மணிக்கு சந்திக்கும் சோனியா, ராகுல், மமதா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள்!

By Mathi

|

Published on 29 Nov 2026, 2:00 PM

MK Stalin- india Bloc

சென்னை வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று (நவ. 29) மாலை 4 மணிக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளனர்.

சென்னை வந்த தலைவர்களுக்கு டிரைடென்ட் ஹோட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவுக்குப் பிறகு, அவர்கள் ஸ்டாலினைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்து மசோதாவை எதிர்க்குமாறு ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.

முன்னதாக, “நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டே திமுக முடிவெடுப்பதாகவும், அந்தப் பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel