ஸ்டாலின் இல்லத்துக்கு கூடுதல் பாதுகாப்பு! சோனியா, கார்கே, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வருகையால் ஏற்பாடு!

By Mathi

|

Published on 29 Nov 2026, 1:00 PM

MK Stalin- india Bloc Leaders House

இந்தியா கூட்டணித் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

முன்னதாக, “இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டே திமுக முடிவெடுப்பதாகவும், அந்தப் பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு திமுக தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் ஸ்டாலின் இல்லத்துக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel