- ராஜன் குறை
தி.மு.க வழிகாட்டுதலை ஏற்று மாநில விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி கட்சியினர் SIR, EVM, EC என்று தனித்தனியாகப் போராட முடியாது. அனைவரும் ஒங்கிணைந்து நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால், ஜெர்ரிமாண்டரிங்க் மூலம் சிறுபான்மை வாக்குகளை வெவ்வேறு தொகுதிகளில் பிரித்தால் பாஜக-வை வெல்ல முடியாது என்ற தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
பாஜக-விற்கு எதிரான போராட்டம் என்பது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் கருத்தியல் பிரசாரம் என்பது மிக முக்கியம்.
காங்கிரஸ் கட்சி இந்திய அரசியல் முரண்களம் என்பது மாநிலங்களில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மாநில தலைமைகளை தானாக சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இங்கிலீஷ் பேசுபவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
வலுவான மாநில கட்சிகளை மதித்து அவர்கள் ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பாஜகவுடனுடனும், அதனை எதிர்க்கும் மாநில கட்சிகளுடனும் போராட முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இதெல்லாம் நடந்தால் நிச்சயம் பாஜக-வை வெல்லலாம். 815, 850 எத்தனை தொகுதிகளாக இருந்தாலும் வெல்லலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அந்த எண்ணமும் நம்பிக்கையும் வேண்டும்.
















