தொகுதி மறுவரையறை மசோதாவால் யாருக்கும் பாதிப்பு இல்லை – ஈபிஎஸ்

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Nov 2026, 3:52 PM

EPS

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வருவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் ஏற்கனவே வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். வரும் டிசம்பர் மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். வரும் டிசம்பருக்குள் முடிவெடுக்கவில்லை என்றால், தற்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் தான் இந்தத் தொகுதி மறுவரையறையைச் செய்ய முடியும். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் எம்பிக்களின் எண்ணிக்கை குறையாது. வரக்கூடிய புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் தான் மத்தியில் இருக்கும் பாஜக அரசு தெளிவுபடுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளுக்குப் புரிய வைத்து, அதன் பிறகு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இது தொடரும் என்பதை முடிவு செய்து அறிவித்துள்ளனர். அதனால்தான் பல்வேறு கட்சிகள் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றன.”

ADVERTISEMENT

திமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “திமுக மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எல்லா கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel