கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் அடங்கிய 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது. vaishali and praggnanandhaa received Arjuna Award
விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் 2ஆவது மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.
வைஷாலியின் சகோதரரும், இந்தியாவின் சிறந்த செஸ் வீரருமான பிரக்யானந்தாவுக்கு கடந்த ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வைஷாலிக்கு அர்ஜூனா விருதும், அவரது பயிற்சியாளர் பி.ஆர். ரமேஷூக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும், ராக் சந்திரசேகர் ஷெட்டி மற்றும் ராங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு உயரிய மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரும் ஜனவரி 9ஆம் தேதி வழங்க உள்ளார்.
அர்ஜுனா விருதுகள் 2023:
- முகமது ஷமி – கிரிக்கெட்
- ஆர் வைஷாலி – செஸ்
- ஓஜஸ் பிரவீன் டியோடலே – வில்வித்தை
- அதிதி கோபிசந்த் சுவாமி – வில்வித்தை
- ஸ்ரீசங்கர் எம் – தடகளம்
- பருல் சவுத்ரி – தடகளம்
- முகமது ஹுசாமுதீன் – குத்துச்சண்டை
- அனுஷ் அகர்வாலா – குதிரையேற்றம்
- திவ்யகிருதி சிங் – குதிரையேற்றம்
- திக்ஷா டாகர் – கோல்ஃப்
- கிரிஷன் பகதூர் பதக் – ஹாக்கி
- புக்ரம்பம் சுசீலா சானு – ஹாக்கி
- பவன் குமார் – கபடி
- ரிது நேகி – கபடி
- நஸ்ரீன் – கோ-கோ
- பிங்கி – லான் பெளல்ஸ்
- ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – துப்பாக்கிச் சூடு
- ஈஷா சிங் – துப்பாக்கிச் சூடு
- ஹரிந்தர் பால் சிங் சந்து – ஸ்குவாஷ்
- அய்ஹிகா முகர்ஜி – டேபிள் டென்னிஸ்
- சுனில் குமார் – மல்யுத்தம்
- அன்டிம் – மல்யுத்தம்
- நௌரெம் ரோஷிபினா தேவி – வுஷு
- ஷீத்தல் தேவி – பாரா வில்வித்தை
- இல்லூரி அஜய் குமார் ரெட்டி – பார்வையற்ற கிரிக்கெட்
- பிராச்சி யாதவ் – பாரா துடுப்பு
பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 2023:
- ஆர்.பி.ரமேஷ் – செஸ்
- லலித் குமார் – மல்யுத்தம்
- மஹாவீர் பிரசாத் சைனி – பாரா தடகளம்
- சிவேந்திர சிங் – ஹாக்கி
- கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் – மல்லகாம்ப்
வாழ்நாள் சாதனையாளர் விருது 2023:
- பாஸ்கரன் இ – கபடி
- ஜஸ்கிரத் சிங் கிரேவால் – கோல்ஃப்
- ஜெயந்த குமார் புஷிலால் – டேபிள் டென்னிஸ்
வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருது 2023:
- கவிதா செல்வராஜ் – கபடி
- மஞ்சுஷா கன்வார் – பேட்மிண்டன்
- வினீத் குமார் சர்மா – ஹாக்கி
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி 2023:
- குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்
- லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி, பஞ்சாப்
- குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம், குருக்ஷேத்ரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2 வருஷத்துக்கு பின் வெளியான அயலான் செகண்ட் சிங்கிள்!
நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?
vaishali and praggnanandhaa received Arjuna Award