பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று (மார்ச் 6) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை மத்திய ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அந்த காலகட்டத்தில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதற்கு நிலத்தை கைமாறாக பெற்ற விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், இன்று சிபிஐ அதிகாரிகள், பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது ராப்ரி தேவி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வீட்டில் உள்ளனர்.
செல்வம்
திருச்செந்தூர் முருகன் கோவில்: மாசி தேரோட்டம் கோலாகலம்!
தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!