பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் இந்த ஐபிஎல் தொடருடன், ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிவருகிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் என இரண்டிலும் அசத்தும் அவர் தற்போது, இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடருன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தினேஷ் ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். RCB star player Dinesh Karthik ipl career come to ends
தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், பெங்களூர், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
மொத்தம் இந்த 16 ஆண்டுகளில் 2 ஐபிஎல் போட்டிகளை மட்டும் தான் அவர் மிஸ் செய்துள்ளார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தாலும் அவரின் தலைமையின் கீழ் அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தினேஷ் 2௦13-ம் ஆண்டு விளையாடிய போது மும்பை அணி கோப்பை வென்றது.
ரூபாய் 5.5 கோடி கொடுத்து வாங்கப்பட்ட தினேஷ் பெங்களூர் அணிக்கு சிறந்த பினிஷராகவும் 2௦22-ம் ஆண்டு இருந்தார்.
அந்த தொடரில் அவர் 33௦ ரன்களை குவித்தார் என்றாலும், 2௦23-ம் ஆண்டில் சரியாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு அவர் வெறும் 140 ரன்களை மட்டும் தான் எடுத்திருந்தார்.
இந்தநிலையில் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் முடிவினை தினேஷ் கார்த்திக் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மொத்தம் 240 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் 4,516 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் அவரின் சராசரி 25.81 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 132.71 ஆகவும் உள்ளது.
விக்கெட் கீப்பராக 133 டிஸ்மிசல்களையும், 36 ஸ்டம்பிங்குகளையும் தினேஷ் செய்துள்ளார். கடந்த 2௦23-ம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணிக்காக ஆடியிருந்தார். அதற்குப்பிறகு அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை.
இந்திய அணியைப் பொறுத்தவரை, 2௦22-ம் ஆண்டு நடைபெற்ற டி2௦ உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதுவே அவரின் கடைசி போட்டியாகவும் அமைந்து விட்டது.
இதனை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஐபிஎல் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறத்தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஓய்வு முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்!
GOLD RATE: தாறுமாறாக உயரும் தங்கம்… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
RCB star player Dinesh Karthik ipl career come to ends