இந்தியா வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
டெஸ்ட் போட்டியின் முதல் நாள் கே.எல். ராகுல், விராட் கோலி, அக்ஸர் படேல் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறினர்.
தொடர்ந்து புஜாரா, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இன்னிங்ஸின் 2வது நாள் போட்டி நேற்று (டிசம்பர் 16) நடைபெற்றது. முதல் நாள் ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ், நேற்றைய போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விளையாடிய அஸ்வின், குல்தீப், முகமது சிராஜ் அடுத்தடுத்து களமிறங்கி விளையாடினர். ஆனால் இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 2 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்த வங்கதேச அணி இன்று (டிசம்பர் 16) 3வது நாள் போட்டியில் விளையாடியது. இன்றைய ஆட்டத்தில் வெறும் 17 ரன்களை மட்டும் சேர்த்த வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் ஆவுட் ஆனது.
இந்தியா அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தற்போது இந்திய அணி தனது அடுத்த இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 39வது ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை குவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணி 394 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மோனிஷா
பொறியியல் தேர்வு தேதி மீண்டும் ஒத்திவைப்பு!
“நீட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை” – அமைச்சர் நம்பிக்கை!