தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று (ஜூலை 4) நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணியும் குவைத் அணியும் நேரடியாக மோதுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான பிஃபா உலக கால்பந்து தரவரிசை பட்டியலின் படி இந்திய கால்பந்து அணி 100 வது இடத்திற்கு முன்னேறியது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளை வென்றதன் மூலம் தான் இந்த பட்டியலில் இந்திய அணி முன்னேறியது.
இந்நிலையில் தான் 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய கால்பந்து அணி 9 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் பெங்களூருவில் இன்று நடைபெறும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குவைத் அணியுடன் நேரடியாக மோத உள்ளது.

இந்த முறையும் கேப்டன் சுனில் சேத்ரியை நம்பி தான் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இதனிடையே அணியின் மற்ற வீரர்களும் அவருடன் சேர்ந்து தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க் கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
மின்னம்பலம் எதிரொலி: அலர்ஜிக்கு நாய்க்கடி ஊசி… மறு விசாரணைக்கு உத்தரவு!