வண்ணமயமான துவக்க விழாவுடன், 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், நேற்று (மார்ச் 22) துவங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாஃப் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி, துவக்கத்தில் தடுமாறியது.
ஆனால், 6-வது விக்கெட்டிற்கு தினேஷ் கார்த்திக் – அனுஜ் ராவத் இணைந்து 95 ரன்கள் குவிக்க, ஆர்சிபி 20 ஓவர்களில் 173 ரன்கள் சேர்த்தது. அனுஜ் ராவத் 38 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
சென்னை அணிக்காக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். பின் களமிறங்கிய சிஎஸ்கே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 18.4 ஓவர்களில் எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
CSK vs RCB: தொட்டதெல்லாம் ‘தூள் பறக்குது’… கொண்டாடி கொளுத்தும் ரசிகர்கள்!
சென்னை அணிக்கு அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், சிவம் துபே 34 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
இப்போட்டியில், பெங்களூரு அணியின் பேட்டிங்கின்போது, அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தில் அனுஜ் ராவத்தை தோனி ரன்-அவுட் செய்தார்.
இதையடுத்து, “தல குறி வச்சா தப்புனதே இல்ல” என ரசிகர்கள் அந்த ரன்-அவுட் வீடியோவை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த ரன்-அவுட் மூலம் ஐபிஎல் தொடரில் தோனி ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
Just a reminder: 𝙏𝙝𝙖𝙡𝙖 𝙣𝙚𝙫𝙚𝙧 𝙢𝙞𝙨𝙨𝙚𝙨 😉#CSKvsRCB #TATAIPL #IPLonJioCinema #IPL2024 #JioCinemaSports pic.twitter.com/KMhidAc9Sp
— JioCinema (@JioCinema) March 22, 2024
இந்த ரன்-அவுட் உடன், ஐபிஎல் தொடர்களில் இதுவரை 24 ரன்-அவுட்டுகளை மேற்கொண்டுள்ள தோனி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட்டுகளை செய்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
CSK vs RCB: பெயர் மாற்றியும் பயனில்லை… மீண்டும் சென்னையிடம் வீழ்ந்தது பெங்களூரு
இந்த பட்டியலில் 23 ரன்-அவுட்டுகளுடன் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்தில் உள்ளார். இது மட்டுமின்றி, இப்போட்டியில் 2 கேட்சுகளையும் பிடித்து, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான விருந்து அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகள் மற்றும் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட்-கீப்பர்கள் பட்டியலில், தோனியே முதலிடத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில், மஹேந்திர சிங் தோனி இதுவரை 140 கேட்சுகளையும், 42 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி!
GOLD RATE: கொஞ்சமாக விலை குறைந்தது தங்கம்
அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு